மகளின் மாண்பு
இரண்டாம்போர்உலகத்தில்மூண்டபோதோ
இரக்கமற்றசெர்மனியின்நாசியர்கள்
கரம்பிணைத்தேஉருசியாவின்வீரர்தம்மை!
கடுஞ்சிறையில்கைதிகளாய்அடைத்துவைத்தே
உரமழிக்கவீரர்கட்குணவும்நீரும்
உறையவைக்கும்குளிருக்குபோர்வைஏதும்
தரமறுத்தேபட்டினியில்துடிதுடிக்கத்
தாங்கொண்ணாகொடுமைசெய்துசாகடித்தார் !
நாள்தோறும்நூற்றுக்கும்மேலாய்வீரர்
நலிந்துசிறைஉள்ளேயேமாண்டுபோக
நாள்கடந்தும்வயதானமுதியவீரன்
நலிவின்றிஎலும்புதோலாய்ஆனபோதும்
தாள்பதித்துநடக்கின்றவலிமையோடு
தாங்கிதுயர்உயிரோடேஇருக்கக்கண்டு
நீள்சிறையைப்பாதுகாக்கும்நாசியர்கள்
நீண்டதொருஐயத்தில்குழம்பிநின்றார்!
சிறையடைத்தவீரரினைக்காண்பதற்கும்
சிறைக்குள்ளேயாரையுமேவிட்டிடாமல்
வரையறுத்தகடுமையானகட்டுப்பாட்டில்
வாய்த்தரத்தஉறவைமட்டும்துரும்பைக்கூட
சிறைக்குள்ளேஎடுத்துசெல்லஇயலாவாறு
சிறப்பாகச்சோதித்தேஅனுமதித்தும்
குறையாதநலமுடனேமுதியவீரன்
குந்திருக்கநாசியர்கள்வியந்துநின்றார்!
அற்புதந்தான்சிறைக்குள்ளேநிகழ்ந்ததென்ன
அடைத்துவைத்தமுதியவீரன்தம்மைக்காணப்
பொற்புதல்விநாள்தோறும்வந்தபோது
பொறுப்புடனேதான்பெற்றகுழந்தைக்கூட்டும்
நற்பாலைத்தந்தைவாய்ஊட்டிவிட்டே
நலம்காத்துநாடுதனைக்காப்பதற்கே
உற்றதுணையாய்நின்றதியாகத்தால்தான்
உயர்நாட்டைத்தாய்நாடாய்ப்போற்றுகின்றோம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.