முத்துக்கமலம் வயது பத்து!
பத்துவயது பிள்ளையாய்
முத்து முத்து தகவல் தந்து
மக்கள் தினம் காணுகின்ற
சித்தமெல்லாம் மகிழவைக்கும்
புத்திமான்கள் கூறும் தமிழ்
கத்துருவாய் ஏற்றுதினம்
கேத்திரமாய் ஆக்கங்களை
தித்திப்பாய் தினம் பகிர்ந்து
எத்திசையிலும் காணும்படி
வித்தையான அமுதமாய்
நித்தமும் குறைவின்றி
மித்திரனாய் நம்மிடையே
மொத்தத்தையும் தருகின்ற
பத்திரிகையாய் இணையத்தில்
தத்தித் தவழும் இதழாம்
முத்துக்கமலம் இதழுக்கு
தித்திப்பான பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் பல...!
- துஷ்யந்தி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.