சிறந்த நெருப்பு
அன்பை அடுத்து
அறிவை எடுத்து
இன்பம் புகட்டு
இதயம் சிரித்து
கடுப்பு விடுத்து
கனிவு கொடுத்து
களிப்பு உடுத்து
கவிதை தொடுத்து
எளிமை இருத்து
இறையைப் புகழ்ந்து
இருளைத் துடைத்து
பொழுதைப் புலர்த்து
கலப்பை பிடித்து
கழனி உழுது
உயர்வை நினைத்து
உடலை வருத்து
விருட்சம் வளர்த்து
வனத்தை அடர்த்து
வறட்சி விரட்டு
வசந்தம் பெருக்கு
போதை தடுத்து
புதுமை கொடுத்து
பாதை வகுத்து
பயணம் நிகழ்த்து
வறுமை ஒழித்து
வெறுமை எரித்து
திறமை அடைந்து
கொடுமை துரத்து
பிறந்த பிறப்பு
சிறந்த நெருப்பு !
- மெய்யன் நடராஜ், தோஹா, கத்தார் .

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.