புது வாழ்வு தருக
புத்தாண்டே... புத்தாண்டே...
புதிதாய் பிறந்த புத்தாண்டே...
கடந்த ஆண்டின் கசப்பான
நிகழ்வுகளை மாற்றிட வா!
குறைந்து விட்ட மனிதநேயம்
மறைந்து விட்ட பண்பாடு
சிதைந்து விட்ட குடும்பங்கள்
இவைகளை சீர் செய்ய வா!
சிதற வைக்கும் வன்முறை
குலை நடுக்க வைக்கும் கொலைகள்
பண்பாடற்ற பாலியல் வன்முறைகள்
இவைகளை அடியோடு அழித்திட வா!
காணமல் போன கொள்கைகள்
விலையாகிப் போன கல்வி
ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள்
இவைகளை மீட்டுத் தர வா!
பெருகி விட்ட லஞ்சங்கள்
நிலைத்து விட்ட ஊழல்கள்
குடி கெடுத்த குடிப்பழக்கம்
இவைகளை குழிதோண்டி புதைத்திட வா!
இத்தனையையும் மாற்றிடவே
தரணியில் பிறந்து வரும்
புத்தாண்டே வருக
புது வாழ்வு தருக எமக்கு!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.