சின்னச் சின்னக் கவிதைகள்
இலவுகாத்த கிளியானேன்
என்னை நீ
நினைக்க மறந்தபொழுது
*****
சிரிப்பினில்
ஆயிரம் அர்த்தங்கள்
அறிந்தேன்
என் அழுகையில்
உன்னை மட்டுமே
உணர்ந்தேன்
*****
பட்ட மரத்திற்குத்
தண்ணீர் ஊற்றினேன்
இலையுள்ள மரங்கள்
இரங்கல் தெரிவித்தன
எனக்கு...
*****
அரக்கால் பூட்டிய இதயத்தை
அழுத்திப் பிடிக்கிறேன்
அவள் எதிரே வருகிறாள்
*****
தினம் நூறுமுறை
அவள் முன்னே நிற்கிறேன்
கணக்கு தெரியாதவளாய்க்
கச்சிதமாய் நடிக்கிறாள்
*****
பெண்ணே உனக்கு
தற்காப்பு தேவையில்லை
உன் கண்களே போதுமடி
*****
எங்களின் இடைவெளியே
பலநூறு வருடம் பயணிக்கும்
நிலவே நீ எம்மாத்திரம்?
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.