தமிழனாகக் கைகோர்த்து...
ஆண்ட பரம்பரை
அது இதுவென்று
அனாவசியப் பெருமையெல்லாம்
பேசித் திரியாதே
உழைச்சாத்தான் சோறு - இதை
ஊருக்கேச் சொல்லு
என் சாதி இரத்தம் தான் வேணும்னு
ஆபத்துக் காலத்துல
அவசர சிகிச்சைல பேசித் திரிய முடியுமா ?
என் சாதிக்காரன் விதைச்ச நெல்லுல தான்
சோறு திண்பேன்னு சொல்லத்தான் முடியுமா ??
வெள்ளையும் சொள்ளையுமா நீ உடுத்தி திரியுற உடை கூட
எவனோ தான் நெய்தது!!
வேதம் வகுத்தவனுக்கும்
வழி வந்தவனுக்கு எல்லாம்
நாமெல்லாம் சூத்திரன்தாண்டா
இது தெரியாம நம்ம சாதி பெருமை பேசி
சாக்கடையாய்ப் போகுறோம்
பாரு கண்ணைத் தொறந்து
இந்த உலகத்தை ஒரு தடவை பாரு
கூறு போட்டுச் சோறு போடுற விளைநிலத்தையெல்லாம்
தாரு ரோடா ஆக்குறான்
ரூபாய் நோட்டை வாங்கியே
ஓட்டைத் தான் குத்துற
சாதிப் பெருமை - கவுரவ கொலை செஞ்சு
வெட்டி வீராப்பு பேசியதெல்லாம் போதும்டா
கணினிக் காலத்திலும் சாதி பேசி
தனி மரமா அனாதையாக நின்றது போதுமடா
ஒற்றுமையாத் தமிழனாகக் கைகோர்த்து நிற்போமடா !!
- இரட்சகன், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.