இளைஞா புறப்படு!
இளைஞர் நலமே இகத்தின் வளமாம்!
இளைஞா உணர்ந்திடு! இன்றே புறப்படேல்!
உலகின் இயல்பறி! உழைத்தே உயர்ந்திடு !
உண்மை உணர்ந்து உன்னதம் ஊக்கேல் !
உறக்கம் தெளிந்திடு ! உற்சாகமாயிரு !
உற்றவர் உறவு பேணி உலகநலம் போற்றேல் !
கவசம் அணிந்து, கைகழுவி, இடைவெளி பின்பற்று !
தாய்மொழி போற்றிடு ! தமிழை வளமுறுத்து !
திறன் வளர்த்துத் தடைகளைத் தகர்த்திடு !
தொற்றுநோய் தொலைந்திடத் தூய்மை துலக்கு !
பொதுஅறிவு பெருக்கி வேலைவாய்ப்பைப் பெற்றிடு !
போதை மறுத்திடு ! பொய்ம்மை வெறுத்திடு !
வீணான விவாதம் வம்பாவதால் விலக்கேல் !
வள்ளுவ வாய்மையை வாழ்க்கை நெறியாக்கிடு !
வறுமை நோயல்ல; வாட்டம் அகற்றிடு !
வானுயர உயர்ந்திடு ! வாழ்க்கை வளப்படுமே !!
- குழந்தைசாமித் தூரன், புதுச்சேரி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.