பாவனை வகுப்பறை
டிஜிட்டலில் ஒளிருகின்றன
சொற்கள்.
கருப்பு அல்லது
வெள்ளைப் பலகையில்
நகர்கின்றன எழுத்துகள்.
செயற்கைக்கோளின் துணை
கொண்டு,
ஒளியையும் ஒலியையும்
இணைத்துப்
பாடத்தை முடித்த
பாவனையில் ஆசிரியர்.
சூடான தேநீர்க் கோப்பையுடன்
மெய்நிகர் காணொலியில்
பாடம் பார்த்த மாணவன்
புரிந்து கொண்டதாய்
பாவனை செய்கிறான்
அவன் மூளை முதலில்
அதிர்ந்து பின்
உள்வாங்கிக் கொள்கிறது.
ஆனாலும்கூட அவனுக்குப்
பெருங்கனவு ஒன்று உண்டு
மெய்யான வகுப்பறையில்
அருகிலுள்ள மாணவனிடம்
ஏதாவது பேச வேண்டுமென்று.
- பாலமுரளி, பெரியகுளம்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.