விரிசல்
ஒவ்வொரு நாளும்
முள்ளின் மீது
நடந்த பொழுதெல்லாம்
வலியில்லை - ஆனால்
இப்பொழுது
வலிக்கின்றது
பிரிவினை வாதம்
உறவுகளுக்குக் கொடுக்கும்
உயர்ந்த பட்டம்
ஏமாற்றுக்காரன்.
நியாங்களும்
தருமங்களும்
காலத்திற்கு
ஏற்றார் போல்
மனிதர்கள்
மாற்றுகின்றார்கள்
எப்பொழுதும்
சமத்துவ மனநிலை
இல்லாதவர்கள்.
இருவரின்
உறவுகளில்
விரிசல்கள்
மூன்றாம் நபரின்
குறுக்கீடுகள்.
எப்பொழுது
ஒரு நிகழ்வு
மறைக்கப்படுகின்றதோ
அப்பொழுதே
அநீதி
தலையெடுக்கின்றது.
நேரிய கண்ணோட்டம்
இல்லையென்றால்
பிரித்தாளுபவர்கள்
விளையாடுவார்கள்
வாழ்க்கையில்.
சுயசிந்தனையோடு
செயல்படுங்கள்
பின்னணியில்
இயக்குபவர்களின்
சூழ்ச்சியைப்
புரிந்து கொள்ளுங்கள்
இல்லையென்றால்
வாழ்க்கை
பாலைவனம்.
எதிரிகளின்
சூழ்ச்சி
தந்திரம்
கொஞ்சம்
கொஞ்சமாய்
மனநிலையில்
மாற்றத்தை
விதைப்பார்கள்
பின்னாளில்
தாக்குவார்கள்
பிறகு
குரங்காட்டிப்
பொம்மையாய்
ஆட்டி வைப்பார்கள்
வாழ்க்கையை
வாழவிட மாட்டா்கள்.
நம் குடுமி
மற்றவா்களின்
கையில்.
தாயின்
சொல்லை விட
வலிமையானது
இவ்வுலகில்
எதுவுமில்லை.
தகப்பனின்
போதனையை விட
இவ்வுலகில்
சிறந்த போதனையில்லை.
குடும்பமென்பது
குருவிக்கூடு
அதைக் கலைக்கக்
காத்திருக்கும்
தந்திரக் கூட்டம்
உரிய தருணத்தில்
தகர்க்க வேண்டும்.
ஒரு பெண்
உருவாக்கிய
புனிதமான
குடும்ப உறவுகளைக்
கலைத்துச் சிதைத்து
இன்னொரு பெண்
குடும்பமாகலாம்
என்றால்
இறைவனும்
தயங்குவான்…
- முனைவா் சி. இரகு, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.