குறுங்கவிதைகள்
தாத்தாவின் வயது
பேரனுக்கு சுலபமாக புரிகிறது
பலவிதமான நோய்கள்
*****
கட்சி வளர்ச்சி
மக்களை மிரட்டியபடி கட்சி
நிதி வசூலிப்பு
*****
மழை அளவு
குறைவாகப் பெய்தாலும்
தொலைக்காட்சிச் செய்தியில் பெருமழை
*****
நடு இரவில்
வானத்தில் பளிச்சிடுகிறது
விண்மீன்கள்
*****
கழுத்தில் மாலையுடன்
பூஜை நடக்கிறது
ஆடு வெட்டு நேர்த்திக்கடன்
*****
குளத்தில் மீன்கள்
நிறைந்திருக்கிறது
கரையில் மீன்கொத்திகள்
*****
விரிசல் சுவர்
அழகாக மாற்றம் செய்தது
வண்ண ஓவியங்கள்
- ஆர். எஸ். பாலகுமார், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.