பதறின் இசைந்தாடாக் கூத்து
ஏதோவொன்று எழுதி
ஏதோவொருப் பொருள் இருப்பதாக
நான் நினைத்துக்கொண்டேன்.
நீ
அது தனக்கானதென
மொழிபெயர்த்தாய்.
அதில்
தன் மீது காதல் மழை பொழிவதாகச் சொன்னாய்.
உன் கைங்கரியக் காதல் பித்தில்
கல்யாணத்தை முடித்துவிட்டாய்.
இப்பொழுது
ஏதோவொன்று எழுதி
ஏதோவொருப் பொருள் இருப்பதாக
நான் நினைத்துக்கொண்டேன்.
நீ
தனக்கானதென மொழிபெயர்த்தாய்.
அதில்
தன் மீது காதல் மழை பொழியவில்லை எனச் சொன்னாய்.
உன் கைங்கரியக் காதல் பித்தில்
கல்யாணத்தை
முறித்துவிட்டாய்.
இப்பொழுதும்
ஏதோவொன்று எழுதி
ஏதோவொருப் பொருள் இருப்பதாக
நான் நினைத்துக்கொண்டேன்.
ஆனால்
வார்த்தைகள்
என்னைவிட்டு
அகல மறுத்து
பொருள் தேடி
அடம் பிடிக்கிறது.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.