கோடம்பாக்கம்
கனவுகளோடு
வந்திறங்குகிறார்கள்
கோடம்பாக்கத்துக்கு
கம்பெனி
படியேறி படியேறி
செருப்பு தேய்ந்து போச்சி
வாய்ப்புக்காக
அவமானங்களையும்
புறக்கணிப்புகளையும்
ஏத்துக்க வேண்டியதாச்சி
இழுத்தடித்த போது தான்
சினிமான்னா என்னண்ணு
புரியலாச்சி
கற்பனைகள்
வறண்டு போச்சி
பசி மயக்கத்தில்
கண்கள் இருட்டாச்சி
வெறுங்கையா
திரும்பிப் போனா
ஊரு சனம் கிண்டல் பண்ணும்
கனவுலக கனவுகளை
மூட்டை கட்டி வைத்துவிட்டு
டீ கிளாஸ் கழுவி
வயிற்றை நிரப்பலாச்சி
சினிமா கம்பெனி முகவரியை
விசாரித்து வருபவர்களின்
எண்ணிக்கை
நாளுக்கு நாள்
கூடிக்கிட்டே போச்சி
இப்போது
திரையரங்குக்குச் சென்று
படம் பார்ப்பதைக் கூட
நிறுத்தியாச்சி.
(கோடம்பாக்கம் - சென்னையிலுள்ள தமிழ்நாடு திரைப்படக் கலைஞர்களுக்கான முக்கிய இடம்.)
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.