கடல்...?
நீல நிறக் குளோரின் இடப்படாத
காதலரின் கண்ணீர் க்ளோரைடு
இடப்பட்ட நீள நீச்சல் குளம் ...
சூரியன் நித்தம் இரவில் தன்
சூட்டைத் தணித்து ஓய்வு
எடுக்கும் தண்ணீர் மஞ்சம்.
இரவின் கருமை இருளில்
வெண்ணிலா எனும் வெள்ளுடை
உடுத்தி வரும் மோகினிப்பெண்
இதன் நீர்ப்பரப்பில் மீன்களுக்கும்
மனற்ப்பரப்பில் மானுடர்க்கும்
புகலிடம் தந்து காக்கும் வள்ளல்
மணற்துகள்கள் பாதங்களை மென்மையாக
வருடி அலை வெண் நுரை கொண்டு கழுவி
மசாஜ் செய்யும் இலவச அழகுநிலையம்...
விண்மீன்கள் தலைக்கு மேலே
பிரகாசிக்க விதவித மீன்கள்
உன் உடலின் உள்ளே சுவாசிக்கும்
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்
ஆயினும் தவித்த வாய்க்குத் தண்ணீர்
தர முடியாத ஓர் அண்டை மாநிலம்.
இதோ இதன் தண்ணீர்ப்பரப்பில்
எங்கேயோ தான் ஓரிடத்தில்
பெருமாள் பள்ளி கொண்டுள்ளார்
தேடினால் கிடைக்கக் கூடும்.
- ஷிரவாணி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.