மீனவன் வாழ்க்கை
துயரப்பொதிகளை
தோணி சுமக்கும்
அலையை எதிர்த்து
பிழைத்தல் நடக்கும்
சீற்றங்கள்
படகுகளை சின்னாபின்னமாக்கும்
புயல் எச்சரிக்கை
கடலுக்குள் போகாமல் தடுக்கும்
எல்லைகளைத் தாண்டாத போதும்
தோட்டாக்களை பரிசாகக் கிடைக்கும்
பலரின் கூக்குரலுக்கு
மெளனம் ஒன்றே
அரசாங்கத்திடமிருந்து
பதிலாகக் கிடைக்கும்
பொங்குவதும், உள்வாங்குவதும்
அடிக்கடி நடக்கும்
இவற்றை பொறுத்துக்கொண்டே
கட்டுமரம் கடலில்
வலை விரிக்கும்
கடலன்னையின் பேரிரைச்சல்
கண்ணுறக்கும் கெடுக்கும்
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே
வாழ்க்கை ஓடம் மிதக்கும்.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.