அந்தப்புரம்
குழந்தையின்
கையில் கிடைத்த
தின்பண்டம்
அம்மாவை சில நாழிகைகள்
மறக்க வைத்தது
கதவு தொடர்ந்து
தட்டப்பட்டது
உள்ளே எவருமில்லை என
பதில் வந்தது
பேருந்து புறப்பட்டுவிட்டது
பயணிகள் ஆசுவாசம்
எத்தனையோ திரைப்படங்கள்
பழகிய வானம்
பார்க்கச் சலிக்குமோ
காலையில் மலர்ந்து
மாலையில் வாடும்
பூவினத்தை
வண்டுகள் நாடுவதேன்
அவள் அனுமதியில்லாமல்
தூறல் தேகத்தை தொட்டது
குளத்தில் நிலவு
மீன்களுக்கு
மின்விளக்கு
ராஜகுமாரரர்களுக்கு
ஆசைப்பட்ட ரதிகள்
சிப்பாய்களுக்கே
வாக்கப்படுகிறார்கள்.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.