ஏதேனும் ஐந்து விடைகள்
பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தவர். அவர் தலைச்சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார்.
அவர் கல்கத்தாவில் பயிலும் போது, பல்கலைக் கழக எம்.ஏ., பரீட்சையில் ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு, ஏதாவது ஐந்து கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கலாம் என்று சொல்லப்பட்டு இருந்தது.
பிரசாத் ஏழு கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டு, 'விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியர் தனக்குப் பிடித்தமான விடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்' என்று எழுதி வைத்திருந்தார்.
- மு. சு. முத்துக்கமலம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.