சட்டையில்லாமல் இருக்கிறீர்களே...!
காந்திஜி ஒருமுறை பள்ளி ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
சட்டையில்லாமல் இருந்த அவரிடம், ‘‘பாபுஜி, சட்டையில்லாமல் இருக்கிறீர்களே...! உங்களுக்காக என் அம்மா ஒரு சட்டை தைத்துத் தந்தால் நீங்கள் போட்டுக் கொள்கிறீர்களா?’’ என்று கேட்டான் ஒரு மாணவன்.
காந்திஜி சிரித்தவாறு கூறினார்:
‘ஓ! போட்டுக் கொள்கிறேனே! ஆனால் ஒன்று. எனக்கு 40 கோடி சகோதரர்கள் உள்ளனர்.அனைவருக்கும் சட்டைகளைத் தைத்துத் தர உன் அம்மாவால் முடியுமா? அப்படியானால் நானும் சட்டை போட்டுக் கொள்வேன்’’.
- உ. தாமரைச்செல்வி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.