மரியாதை தெரிந்தவர்
ஒரு நாள் ஆப்ரகாம்லிங்கன் கோச் வண்டியில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் அவரைக் கண்ட ஒரு கறுப்பின மனிதர் தனது தொப்பியைக் கழற்றி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
லிங்கனும் தமது தொப்பியைக் கழற்றி அவருக்குப் பதில் மரியாதை செலுத்தினார்.
அப்போது ஜனாதிபதியுடன் சென்ற நண்பர் ஒருவர், “நீங்களோ ஜனாதிபதி. அந்தக் கறுப்பு மனிதன் ஏழைப் பிரஜை. அவனுக்கு நீங்கள் பதில் மரியாதை செலுத்த வேண்டுமா?’’ கேட்டார்.
லிங்கன் புன்னகையுடன், “என்னை விடவும் மரியாதை தெரிந்த ஒருவர் இருப்பதை நான் விரும்புவதில்லை’’ என்றார்.
- உ. தாமரைச்செல்வி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.