நீதிபதிக்கு வழக்கறிஞரின் பதிலடி
ஒரு சமயம் முக்கிய வழக்கொன்றில் புகழ்பெற்ற இந்திய வழக்கறிஞர் நார்ட்டன் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே நாய் ஒன்று பலமாகக் குரைத்தது.
அதைக் கேட்ட நீதிபதி மாக், நார்ட்டனை மட்டம் தட்ட எண்ணி நார்ட்டனை நோக்கி, "ஒரு சமயத்தில் ஒருவர் பேசினால் நல்லது” என்று கூறினார்.
அதற்கு நார்ட்டன் உடனடியாகப் பதிலேதும் கூறவில்லை.
வாதம் முடித்து நீதிபதி மாக் தீர்ப்பு கூறிக்கொண்டு இருந்தார். அந்தச் சமயத்தில் வெளியில் நாய் பலமாகக் குரைத்துக் கொண்டிருந்தது.
"அந்தப் பக்கத்தில் எதிரொலி கேட்கிறது!” என்றார் நார்ட்டன்.
அதைக் கேட்ட நீதிமன்றத்திலிருந்த அனைவரும் சிரித்தனர்.
- மு. சு. முத்துக்கமலம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.