ஒரு நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தம் நண்பர்கள் சிலருடன் குதிரை மீது சவாரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நீக்ரோ எதிரில் வந்தார். அவர் தம் தொப்பியை எடுத்து, ஜனாதிபதிக்கு வணக்கம் செலுத்தினார்.
வாஷிங்டனும் தலை குனிந்து அவனுக்கு மரியாதை தெரிவித்தார்.
அந்த நாட்களில் அமெரிக்காவில் நிறவெறி உச்சத்தில் இருந்தது. நீக்ரோக்களை வெள்ளையர் மிகவும் வெறுத்தனர்.
வாஷிங்டனின் நண்பர்களுள் ஒருவர், “நீங்கள் அந்தக் கறுப்பு மனிதனுக்கு இப்படி மரியாதை செலுத்தியது சரியல்ல" என்றார்.
ஜனாதிபதி புன்முறுவலுடன், “அந்தப் படிக்காத நீக்ரோ இவ்வளவு நன்றாக மரியாதை செலுத்தும்போது, நான் மரியாதை தெரியாத ஒரு நீசனாக நடந்து கொள்ளலமா?" என்று கேட்டார்.
நண்பனால் பதில் சொல்ல இயலவில்லை.