மகாதேவ கோவிந்த ரானடே ஒரு முறை ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரைக் காணச் சென்றிருந்தார்.
பல மதங்களைப் பற்றிய புத்தகங்கள் மேஜையின் மேல், ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தன.
பேச்சின் நடுவே அந்தப் பாதிரியார் புத்தக அடுக்கின் மேலாக இருந்த பைபிளைச் சுட்டிக்காட்டி, “பார்த்தீர்களா, கிறிஸ்துவ மதம்தான் மேலாக இருக்கிறது'' என்று கூறிப் புன்னகைத்தார்.
எல்லாப் புத்தகங்களுக்கும் கீழே வைக்கப்பட்டிருந்த பகவத் கீதையைச் சுட்டிக்காட்டி ரானடே, "ஃபாதர், பைபிள் மேலாகத்தான் இருக்கிறது. ஆனால் பகவத்கீதைதான் மற்ற எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் கவனித்திருப்பீர்களே?" என்று கூறினார்.
அவர் சொன்னதற்கு, அந்தக் கிறித்தவப் பாதிரியாருக்குச் சரியானபதில் சொல்லத் தெரியவில்லை.