யார் அந்தத் துறவி?
அவர் ஒரு துறவி. அவர் இந்தியாவின் பல இடங்களிலும் மிகவும் அலைந்து திரிந்து பழங்கால ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்தார்.
அவ்விதம் சேகரித்த ஏட்டுச் சுவடிகளைப் படகில் ஏற்றிக் கொண்டு கங்கை நதியின் அக்கரையிலுள்ள புத்த மடாலயத்திற்குக் கொண்டு சென்றார் அந்தத் துறவி.
நதியின் பாதி தூரத்தில் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது ஏட்டுச் சுவடிகளின் பாரம் தாங்காமல் படகு கவிழும் ஆபத்தான நிலை ஏற்பட்டது.
படகோட்டி, இரண்டு கட்டு ஏட்டுச் சுவடிகளை எடுத்து நதியில் போட்டுவிட்டால் பாரம் குறையும்; படகு மூழ்காது என்று துறவியிடம் கூறினான்.
அதைக் கேட்டுத் துறவி அதிர்ச்சியடைந்தார். ஆ! எத்தனை எத்தனை துன்பங்களுக்கிடையே சேகரித்த அறிவுப் பொக்கிஷங்கள்! இவற்றை ஆற்றில் போடுவதா? என்று அவர் கவலையடைந்தார்.
படகோட்டியிடம், வேண்டாமப்பா! பாரம் குறைய நானே படகிலிருந்து இறங்கி விடுகிறேன். ஏட்டுச் சுவடிகளை மடத்தில் கொண்டு போய்ப் பத்திரமாகச் சேர்த்துவிடு என்று சொல்லிவிட்டு, தமது உயிரையும் பொருட்படுத்தாமல் நடுக் கங்கையில் குதித்துவிட்டார் அந்தத் துறவி.
யார் அந்தத் துறவி என்கிறீர்களா...?
கி.பி. 406 ஆம் ஆண்டில் சீனப்பயணியாக இந்தியாவிற்கு வந்த பௌத்தத் துறவி பாஹியான் என்பவர்தான் அவர்.
- மு. சு. முத்துக்கமலம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.