ஒரு சிறுமி தன் வகுப்பாசிரியரிடம் திமிங்கலத் தைப் பற்றி சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஆசிரியர் கூறினார், "திமிங்கலம் மிகப் பெரியது. பாலூட்டும் விலங்கு. இருந்தாலும், அதன் தொண்டை குறுகியதாய் இருப்பதால், மனிதனை முழுதாக விழுங்க அதனால் இயலாது”.
சிறுமி விடவில்லை. "பின் பைபிள் கதையில் போட்டிருக்கிறதே, ஜோனாவை திமிங்கலம் உயிரோடு விழுங்கி, பின் மூன்று நாள் கழித்து உயிரோடு துப்பியது என்று?”
டீச்சருக்கு எரிச்சல் வந்தது. "நான்தான் சொல்கிறேனே, திமிங்கலம் மனிதனை முழுதாக விழுங்குவதென்பது நடக்காத செயல் என்று?”
"அப்படியானால் டீச்சர், நான் சொர்க்கத்துக்கு சென்றதும் ஜோனாவைக் கேட்கிறேன்” என்றாள் சிறுமி.
டீச்சரும் விடவில்லை. "ஒரு வேளை ஜோனா நரகத்துக்குச் சென்றிருந்தால்?”
"நீங்கள் கேளுங்கள் டீச்சர்”