ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு நோய் வந்துவிட்டது.
பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும்,சிறிதும்... பயனில்லை.
'குணமாகவில்லையே, என்ன செய்வது?' என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, ''நீங்கள் ஏன் ஒரு கால்நடை மருத்துவரிடம் போகக் கூடாது?'' என்றாள்.
அதிர்ச்சி அடைந்த கணவன், ''உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?'' என்று கேட்டான்.
மனைவி சொன்னாள்:
“எனக்கொன்றும் இல்லை. உங்களுக்குத்தான் எல்லாம் கெட்டுப் போச்சு. காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபீசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க. அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்துறீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி குரைக்கிறீங்க. அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டைச் சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாதிரி தூங்கறீங்க. அதனாலதான் சொல்றேன், உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்...”
என்ன சொல்வதென்று கணவன் முழிக்க...
''என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க?'' என்றாள் மனைவி.