அச்சம் இருக்கும் வரை...!

துக்கப்படுவது எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது.
- ராஜாஜி

கருணையில்தான் ஒரு மதத்தின் ஆணிவேரே அடங்கியிருக்கிறது.
- ஒளவையார்

தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும்.
- பாரதியார்

உணவு உடையும் உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.
- இயேசுநாதர்

அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய்.
– பாரதியார்

தனித்து நம்மால் செயல்பட முடியாததற்குக் காரணம் வலிமையற்ற மனம்தான்.
- ஸ்ரீ ரமண மகரிஷி

உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படுத்தாது; சேவைதான் வெளிப்படுத்தும்.
- காந்திஜி

தன்னைச் சரிபடுத்திக் கொள்பவனே, உலகைச் சரிபடுத்த தகுதியானவன்.
- விவேகானந்தர்

பிறருக்காக வாழும் பொதுநலப் பண்பு மனிதனுக்கு ஒரு நலமாகும்.
- அரவிந்தர்

மூடனைப் பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.
- புத்தர்

பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
- சாணக்கியர்

பிறருடன் பேசும்போது பிறகு நினைத்து வருந்தும் சொற்களைப் பேசாதீர்கள்.
- நபிகள் நாயகம்

நாம் உயிர்களிடம் அளவு கடந்த கருணை வைத்தாலன்றி நாம் கடவுளின் கருணையை பெற முடியாது.
- கிருபானந்தவாரியார்

சத்தியமும், அன்பும், அருளும் வாழ்வில்மலர்ந்துவிட்டால் நாம் கடைத்தேறிவிட்டோம்என்று ஆகும். இல்லையேல்நம் வாழ்க்கையே பாழாகிவிட்டதுஎன்று கொள்ள வேண்டியதுதான்.
- குருநானக்

தாய்மொழியை மதித்துப் போற்றுங்கள். மடமையைக் கொளுத்துங்கள், தாய்மொழியுடன் உள்ளக் கல்வியும் உலகக் கல்வியும் சேர்ந்து உங்கள் உண்மைக் கல்வி நிறைவாகும்.
- ராமகீர்த்தர்

மனிதன் கடைத்தேறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு வழி முக்கியமானது. அது தன்னைத் தானே சோதனை செய்து கொள்வதாகும்.
- கிருபானந்தவாரியார்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.