* எப்பொழுதும் பிரியமாகப் பேசுகிற மனிதர்கள் நன்கு கிடைப்பார்கள். ஆனால் பிரியமில்லாத நலம் தரும் வார்த்தை பேசுபவனும் கேட்டவனும் மிகவும் கஷ்டமாகத்தான் அகப்படுவான்.
* பிரம்மனால் பிரிக்கப்பட்டு, கிரமமாகத் தேளின் கொடுக்கிலும், பாம்பின் வாயிலும் துஷ்டர்களின் இதயத்திலும் விஷம் வைக்கப்பட்டது.
* கெட்டிக்காரனுக்கு எது தான் சுமை? உழைப்பவனுக்கு எது தான் தொலைவு? நன்றாகப் படித்தவனுக்கு எது தான் மற்ற நாடு? அன்பாகவே பேசுபவனுக்கு யார் தான் மாற்றான்?
* பிறப்புக் கொடுத்தவன், நல்வழியில் நடத்தியவன், படிப்புச் சொல்லிக் கொடுத்தவன், அன்னம் கொடுத்தவன், பயத்திலிருந்து காப்பாற்றியவன் இந்த ஐவரும் பிதா என்று கருதப்படுகிறார்கள்.
* சோம்பேறித்தனம் மனிதர்களின் வேகத்தில் இருக்கும் பெரிய பகைவன். உழைப்புக்கு நிகரான உறவினன் வேறு இல்லை.
* பிற மாதர்களை அன்னை போலவும் பிறர் செல்வத்தைக் கல் போலவும் எல்லா ஜீவன்களிலும் தன்னையே எவன் காண்கிறானோ அவன் தான் பண்டிதன், படித்தவன், பண்புடையவன்.
* இந்தச் சம்சாரம் ஒரு கசப்பு மரம். இதன் இரண்டு பழங்கள் மட்டும் அமுதத்திற்குச் சமம். அதாவது நல்ல பேச்சும் நல்லவர்களின் சேர்க்கையும்.
* சாந்தத்திற்குச் சமமான தவம் வேறில்லை. மகிழ்ச்சியைத் தவிர வேறு சுகமில்லை. ஆசையைவிட வேறு வியாதி இல்லை. தயை, கருணை இதைக் காட்டிலும் வேறு தர்ம மொன்றில்லை.
* பொருளுக்கு மனிதன் அடிமை; பொருள் யாருக்கும் அடிமையில்லை.
* சம்சாரம் என்ற கடுஞ்சாலையில் சத்தியம் தான் கட்டுச்சோறு.
* எது தானம்? கைம்மாறு எதிர்பாராமல் கொடுப்பது. எவன் நண்பன்? பாவம் செய்வதிலிருந்து தடுப்பவன். எது ஆபரணம்? நல்லொழுக்கம். பேச்சுக்கு அழகு எது? உண்மை.
* இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்