செல்வத்தைக் காட்டிலும் மேலானது எது?

தன்னிடம் கடவுளைக் காணாதவர்களுக்குக் கடவுள் இல்லை.
- டால்ஸ்டாய்

ஒரு சோம்பேறியின் மனது அவனையே சாப்பிட்டுவிடுகிறது.
- லூதர்

மனிதன் வெறும் உணவினால் மட்டும் வாழ முடியாது.
- பைபிள்

அறச் செயல்களுக்கு எப்பொழுதும் ஆண்டவனின் அருள் உண்டு.
- வில்லியம் காங்கிரீவ்

நல்லவன் என்ற பெயர், செல்வத்தைக் காட்டிலும் மேலானது.
– பர்கர்

பிறருக்கு உதவி செய்யாதவர்கள் பிறர் உதவியை எதிர்பார்க்க முடியாது.
- ஈசாப்

மனிதனின் அதிர்ஷ்டம் அவன் தலைவிதியில் இல்லை. அவன் நடத்தையில்தான் இருக்கிறது.
- இங்கர்சால்

கோபத்தை அடக்குகின்றவனும், குற்றம் செய்பவர்களை அடக்குகின்றவனும் பாக்கியசாலிகள்.
- முகமது நபி

கடவுள் வரையறைகளுக்கு அடங்காதவர். நாம் அவரை உணருகிறோமே தவிர அறியவில்லை.
- காந்தியடிகள்

தீயவர்கள் அச்சத்தினால் தான் பணிவார்கள். நல்லவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அன்புக்கே உண்டு.
- அரிஸ்டாட்டில்

சாட்சியில்லாத காலத்தில் மனமே சாட்சியாகும்.
- கன்பூசியஸ்

மனிதர்கள் அற்ப விஷயங்களிலேயே இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
- நெப்போலியன்

தன்னை வெட்டும் கோடாரிக்கும், நறுமணம் தரும் சந்தன மரம் போன்றவன் நேர்மைமிக்க மனிதன்.
- துளசிதாசர்

வயிற்றுக்கு அடிமையாக உள்ளவன் கடவுளைத் தொழுவது அரிது.
- ஸா அதி

மனிதனை எது அடிமையாக்குகிறதோ, அது அவன் தகுதியில் பாதியை அழித்துவிடுகிறது.
- போப்

வேதாந்தம் என்பது வெட்டிப் பேச்சல்ல; அதுதான் வாழ்க்கையின் தத்துவம்.
- தாம்சன்

உயர்ந்த பண்புக்கு அடிப்படை சில்லறைத் தியாகங்கள்.
- எமர்சன்

அறிவு எப்போதும் பக்திக்குப் பின்னரே செல்ல வேண்டும். அதை முந்தவும் கூடாது; அழிக்கவும் கூடாது.
- தாமஸ் கெம்பிஸ்

பிறர் குற்றம் காண்பதும், தன் குற்றம் மறுப்பதுமே மடமையின் லட்சணம்.
- ஸிஸரோ

பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனிதகுணம். பிறர் துன்பத்தை நீக்குதல் தெய்வகுணம்.
- ஹோரெஸ்மான்

மனிதரின் இன்னலைக் கண்டு மனிதன் கண் கலங்காவிட்டாலும் இயற்கை அன்னை கண் கலங்குகிறான்.
- வேர்ட்ஸ்வொர்த்

உழைப்பு சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால், அந்த உழைப்பு கடினம் போலத் தோன்றும்.
- டால்ஸ்டாய்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.