1. வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி -
அது என்ன?
2. ஒட்டிப் பிறந்த சகோதரர்கள், சேர்ந்தால் மற்றவர்களைப் பிரிக்கவே சேருவார்கள் -
அது என்ன?
3. பகலில் எரியா விளக்கு, இரவில் அணையா விளக்கு -
அது என்ன?
4. அள்ள முடியும், கிள்ள முடியாது -
அது என்ன?
5. அம்பும் நாணும் இல்லாத வில், ஆகாயத்தில் தோன்றும் வில் -
அது என்ன?
6. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைக்கும் -
அது என்ன?
7. கடலில் தோன்றி, கடலில் மறையும் -
அது என்ன?
8. நிழலுக்கு ஒதுங்கலாம், மழைக்கு ஒதுங்க முடியாது -
அது என்ன?
9. காண்பவரை ஏமாற்றும் நீர், தாகம் தீர்க்காத நீர் -
அது என்ன?
10. இளசிலே தாகம் தீர்க்கும், முற்றினால் சமையலில் ருசிக்கும் -
அது என்ன?
விடைகள்:
1. விளக்குத் திரி
2. கத்தரிக்கோல்
3. நிலா
4. தண்ணீர்
5. வானவில்
6. தூக்கம்
7. அலைகள்
8. மரம்
9. கானல் நீர்
10. தேங்காய்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.