1. புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன் -
அவன் யார்?
2. கருப்பையில் சில மாதம், வெளிப்பையில் சில வருடம் பிள்ளை சுமப்பான் -
அவன் யார்?
3. ஆளில்லாத வீட்டில் அவன் குடியேறுவான் -
அவன் யார்?
4. உடைக்க முடியாத ஓட்டிற்குள் ஒளிந்திருப்பான் கள்ளன் -
அவன் யார்?
5. கொடுக்கு இரண்டு இருந்தாலும், அவனுக்கு வாலில்தான் விஷம் -
அவன் யார்?
6. பழகினால் மறக்காதவன், பயம் அறியாதவன் -
அவன் யார்?
7. எட்டுக்கால் ஊன்றி இடமும், வலமுமாக வருவான் –
அவன் யார்?
8. நீரிலும், நிலத்திலும் வாழ்வான், பாறைக்குள்ளும் பதுங்கி வாழ்வான் –
அவன் யார்?
9. அவன் அன்னநடை நடந்தாலும் சும்மா அதிரும் -
அவன் யார்?
10. ஓடையில் நிற்கும் ஒற்றைக்காலனுக்கு ஒரே குறி உணவு –
அவன் யார்?
விடைகள்:
1. மான்
2. கங்காரு
3. சிலந்திப்பூச்சி
4. ஆமை
5. தேள்
6. நாய்
7. நண்டு
8. தவளை
9. யானை
10. கொக்கு
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.