1. வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள்.
அவள் யார்?
2. அரங்கினில் ஆடாதவள், கிளைகளில் அரங்கேற்றம் நடத்துவாள்.
அவள் யார்?
3. தோகைபோல உடம்புக் காரி, துப்புரவு தொழிலுக்கு கெட்டிக்காரி.
அவள் யார்?
4. குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி பிள்ளை வளர்ப்பாள்.
அவள் யார்?
5. அந்தி வரும் நேரம், அவளும் வரும் நேரம.
அவள் யார்?
6. பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் -
அவள் யார்?
7. சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி.
அவள் யார்?
8. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள்.
அவள் யார்?
9. சருகுச் சேலைக்காரி, சமையலுக்கு உதவுவாள்.
அவள் யார்?
10. சுட்டெரிக்கும் வெயிலிலும் சுகம் தரும் மாயக்காரி.
அவள் யார்?
விடைகள்:
1. மான்
2. கங்காரு
3. சிலந்திப்பூச்சி
4. ஆமை
5. தேள்
6. நாய்
7. நண்டு
8. தவளை
9. யானை
10. கொக்கு
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.