1. தொடப் பார்த்தேன் எட்டிச் சென்றது, பறந்து பார்த்தேன் விரிந்து சென்றது.
அது என்ன?
2. விரிந்த வயல் வெளியில் வதைத்த நெல் மணிகள்.
அது என்ன?
3. காலையில் உறவாடி வருவான், மாலையில் பறந்தோடிப் போவான்.
அவன் யார்?
4. பகலில் எரியா விளக்கு, இரவில் அணையா விளக்கு.
அது என்ன?
5. அனைவரையும் ஆட்டிப் படைக்கும், ஆதவன் வந்தால் ஓடிப்போகும்.
அது என்ன?
6. உறங்காமல் தவிப்பவன், ஊருக்குள் வந்தால் பலரை பலி வாங்குவான்.
அவன் யார்?
7. கை இல்லை, கால் இல்லை, காடு மேடு, மலை தாண்டி போகிறான், ஆனால் பறவையல்ல.
அது யார்?
8. குளிருக்கு கல்லாவான், அனலுக்கு தண்ணீராவான்.
அது என்ன?
9. மழை நேரத்தில் வெட்ட வெளியில் மின்னும் விளக்கு.
அது என்ன?
10. சிதறிக் கிடக்குது புள்ளிகள் சித்திரம் வரைய ஆளில்லை.
யார் அது?
விடைகள்:
1. வானம்
2. நட்சத்திரம்
3. சூரியன்
4. நிலா
5. குளிர்
6. சுனாமி
7. மேகம்
8. பனிக்கட்டி
9. மின்னல்
10. நட்சத்திரக் கூட்டம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.