தோல்விகளுக்கான காரணங்கள் 54 என்று பட்டியலிடுகிறார் ஓர் அறிஞர். அதில் பன்னிரெண்டு காரணங்கள் மிகவும் முக்கியமானவைகளாக இருக்கின்றன.
1. வாழ்க்கையில் அடைய வேண்டிய நிச்சயமான குறிக்கோள் எதுவுமில்லாமல் ஏதோ வாழ்ந்து கொண்டிருப்பது.
2. ஆரம்பித்த பணியை இடைவிடாமல் முயன்று முடிக்கும் தீவிரம் இல்லாமை.
3. தொழிலில் அல்லது வியாபரத்தில் தவறான கூட்டாளிகளைத் தேர்ந்தெடுப்பது.
4. வரவு செலவுக் கண்ணோட்டம் இல்லாமல் இஷ்டத்திற்குச் செலவு செய்வது.
5. ஆன்மிகம், அரசியல், பொருளாதார விஷயங்களில் சகிப்புத் தன்மை இல்லாத அறியாமை மற்றும் வெறுப்பை ஆதாரமாகக் கொண்ட மூடிய மனம்.
6. தக்க வாய்ப்புகளை அறியும் பார்வையும், எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இருப்பது.
7. அடுத்தவர் பற்றிய தேவையற்ற வம்பளப்பு .
8. கேட்கப்படாத இடங்களில் தன் விமர்சனத்தை வழங்குவது.
9. தேர்ந்தெடுத்தப் பாதையில் முன்னேறும் தன்னம்பிக்கை இல்லாமை.
10. இன்றே, இப்போதே செய்யக் கூடியவற்றை நாளைக்கு என்று தள்ளிப்போடல்.
11. இனிமையற்ற சூழ்நிலைகளைத் துணிவுடன் சமாளிக்க முயற்சி செய்யாமல் ஓடி ஒளிந்து கொள்வது.
12. உண்மையான அல்லது கற்பனையான காயங்களுக்காகப் பழிவாங்கத் துடிப்பது