பேச்சில் ‘கள்’ வேண்டும்...!
கள் குடித்தால் மட்டும்தான் மயக்கம் வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு. கள் என்று பேசினாலே மயக்கம் வரும். எப்படி?
''நீங்கள் வாருங்கள்!'' என்று உங்கள் விருந்தினரை மரியாதையுடன் அழைத்துப் பாருங்கள். அவர் அந்த மரியாதையில் மயக்கம் கொண்டு உங்களுக்கு வேண்டியதைச் செய்வார். உங்கள் காரியமும் கைகூடும்.
எனவே, குடிக்கும் அந்தக் 'கள்' நமக்கு வேண்டவே வேண்டாம். பேச்சில் 'கள்'ளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் திருமுருக கிருபானந்தவாரியார்.
அப்புறமென்ன, பேச்சில் ‘கள்’ சேர்த்துப் பயனடையுங்கள்...!
தொகுப்பு: மு. சு. முத்துக்கமலம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.