உலகில் அற்பமானது எது?
ஒரு புலவரிடம் ஒரு தனவந்தர், ''உலகில் எது அற்பமானது?'' என்று கேட்டார்.
புலவர், ''துரும்பு'' என்றார்.
''துரும்பை விட அற்பமானது உள்ளதா?''
''பஞ்சு''
''பஞ்சைவிட அற்பமானது உள்ளதா?''
''யாசிக்கிறவனே மிகவும் அற்பமானவன்''
கேட்டவர் விடுவாரா?
''புலவரே, காற்று பஞ்சை அடித்துக் கொண்டு போகிறதே, யாசிக்கிறவனை ஏன் காற்று அடித்துக் கொண்டு போவதில்லை?''
புலவர்: ''ஐந்து தா, பத்து தா என்பவனிடம் போனால் நம்மையும் ஏதாவது கேட்பான் என்று அஞ்சி அவனிடம் காற்று செல்வதில்லை''
கிருபானந்த வாரியார் நகைச்சுவை
மு. சு. முத்துக்கமலம்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.