கவசம் அணியாதது ஏன்?
ஒரு முறை ஒட்டக்கூத்தர், புகழேந்தியைப் பார்த்து, “எங்கள் சோழ மன்னர் முதுகுக்குக் கவசம் அணிவது இல்லை. உங்கள் பாண்டிய மன்னர்கள்தான் உறுதியான முதுகுக் கவசம் அணிகிறார்கள். முதுகுக் கவசம் அணியாததற்கான காரணம் உங்களுக்குத் தெரியுமா? எங்கள் மன்னர்கள் போரில் புறமுதுகு காட்டி ஓடமாட்டார்கள்" என்றார்.
அதற்குப் புகழேந்திப் புலவர், “உங்கள் மன்னர்கள் கவசம் அணியாததற்குக் காரணம், நீங்கள் சொன்னது அல்ல. புறமுதுகிட்டு ஓடும் கோழைகள் மீது எங்கள் பாண்டிய மன்னர்கள் வேல் எறிவதில்லை என்ற நம்பிக்கைதான் காரணம்!" என்றார்.
மு. சு. முத்துக்கமலம்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.