நீங்க மட்டும் உட்கார்ந்திருக்கீங்களே...!
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஒரு சமயம் பேருந்தில் செல்ல இருந்தார்.
அப்போது பயணிகள் அனைவரும் கீழே இறங்கிப் பேருந்தைத் தள்ள வேண்டியதாயிற்று. வயதான ஒருவர் மட்டும் பேருந்திலேயே உட்கார்ந்திருந்தார்.
அவரைப் பார்த்து ஒருவன், ‘‘ஐயா, நீங்க மட்டும் தள்ளாம உட்கார்ந்திருக்கீங்களே?’’ என்றான் கோபமாக.
அதற்கு அருகிலிருந்த நாமக்கல் கவிஞர் அவர்கள், ‘‘தம்பி, அவர் தள்ளாதவர். அவரை ஒன்றும் சொல்லாதேப்பா’’ என்றார்.
கோபப்பட்ட வாலிபன் உட்பட அனைவரும் அதைக் கேட்டுச் சிரித்து விட்டனர்.
தொகுப்பு:- உ. தாமரைச்செல்வி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.