வளர்ந்த பின் பார்க்கலாம்!
வகுப்பறையில் மாணவர்களை வைத்து ஒரு குரூப் போட்டோ எடுத்தார்கள்.
மாணவர்களிடம் புகைப்படத்தை விலை கொடுத்து வாங்கும்படி ஆசிரியை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.
"நீங்கள் வளர்ந்த பின் புகைப்படத்தைப் பார்க்கும் போது, 'ஜெனிபரைப் பார், வளர்ந்து இப்போது வக்கீலாகி விட்டாள். மைக்கேலைப் பார், டாக்டராகி விட்டான்' என்று ஆச்சர்யத்துடன் பேசிக் கொள்ளலாம்” என்றார்.
வகுப்பின் கடைசி பெஞ்சிலிருந்து ஒரு சிறுவன் குரல் கொடுத்தான், " 'இதோ பார், நம் டீச்சர் வளர்ந்து பாட்டியாகி விட்டார்' என்றுகூட பேசிக் கொள்ளலாம்” என்றான்.
மு. சு. முத்துக்கமலம்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.