அடைக்கலசாமி
நீதிபதி : உன் பேர் என்னப்பா?
குற்றவாளி : 'அடைக்கலசாமி'ங்க.
நீதிபதி : பாங்க்ல வாங்குன லோன் என்னப்பா ஆச்சு?
குற்றவாளி : இன்னும் 'அடைக்கலசாமி'
நீதிபதி : எப்பப்பா அடைக்கப்போற?
குற்றவாளி : கூடிய சீக்கிரம் 'அடைக்கலாம்சாமி'
நீதிபதி : பாங்க்ல இருந்து உங்க வீட்டுக்கு ஆபீசர்கள் வந்தபோது நீ வீட்டை அடைச்சிட்டு வெளியே போயிட்டியாமே?
குற்றவாளி : இல்ல சாமி. சத்தியமா நான் 'அடைக்கலசாமி'
நீதிபதி : நீ இப்ப எங்கப்பா இருக்க?
குற்றவாளி : தற்சமயம் நான் மாமனார் வீட்ல 'அடைக்கலம்சாமி’
(இணையத்தில் படித்தது)
தொகுப்பு:- உ. தாமரைச்செல்வி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.