எப்போது சாவேன்?
கொடுங்கோலன் ஹிட்லருக்கு ஜோசியத்தில் அபார நம்பிக்கை உண்டு. அவர் ஒரு ஜோசியரிடம், "நான் எப்போது சாவேன்?” என்று கேட்டார்.
ஜோசியர் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து சொன்னார்: "நீங்கள் யூதர்களின் விடுமுறை தினத்தன்று இறப்பீர்கள்!”
அதற்கு ஹிட்லர், "இது போதாது; என்றைக்கு இறப்பேன் என்பதை உறுதியாகச் சொல்ல வேண்டும்” என்றார்.
ஜோசியர் சொன்னார்: "அது என்னால் முடியாது. எனக்குத் தெரியவும் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் நீங்கள் என்றைக்கு இறக்கிறீர்களோ அன்று யூதர்களுக்கு விடுமுறை தினம் என்பதுதான்!”
தொகுப்பு:- உ. தாமரைச்செல்வி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.