நூற்றுக்கு மூன்று சரியா?
பைத்தியக்கார ஆஸ்பத்திரியைப் பார்க்க வந்த ஒருவர், அங்கே பயங்கரமான பைத்தியங்கள் நூறு பேருக்கு மேல் இருப்பதையும் காவலர் மூன்று பேர்தாம் இருப்பதையும் கண்டார்.
அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
டாக்டரிடம் சென்ற அவர், ''அந்தப் பைத்தியங்கள் காவலர்களை மடக்கிப் போட்டு எளிதாகத் தப்பிவிடலாமே! இந்த எண்ணம் உங்களுக்கு தோன்றவில்லையா?'' என்று கேட்டார்.
அதற்கு டாக்டர், "பைத்தியங்கள் எப்போதும் ஒன்றுசேர மாட்டார்கள்'' என்று பதில் தந்தார்.
மு. சு. முத்துக்கமலம்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.