சத்தம் செய்தவன்
சார்லஸ் லாம்ப் என்ற ஆங்கில அறிஞர் கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்தார்.
கூட்டத்தில் ஒருவன் 'உஸ் உஸ்...' என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.
அந்த அறிஞர் பேச்சை நிறுத்தி, ''மூன்றின் கூச்சல்தான் இவ்வாறு 'உஸ்' என்று ஒலி எழுப்பும். ஒன்று தாள வாத்தியம். இரண்டு பாம்பு. மூன்று மூடன். இப்போது வந்த சத்தம் இந்த மூன்றில் யாருடையது என்று தெரியவில்லை. சற்று முன்னால் வந்தால் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
சத்தம் செய்தவன், சத்தமில்லாமல் அங்கிருந்து சென்றான்.
தொகுப்பு:- உ. தாமரைச்செல்வி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.