எந்தத் தடையும் இல்லை!
முன்னொரு காலத்தில் அமெரிக்கர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது.
அப்போது அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக இருந்த ஹாலி பாக்ஸ் பிரபு இந்தப் போக்கை மாற்ற விரும்பி அமெரிக்கா முழுதும் சுற்றுப்பயணம் செய்து நல்லெண்ணக் கூட்டங்கள் நடத்தினார்.
அவ்வாறு ஒரு கூட்டம் முடிந்து புறப்படும் போது ஒரு குடியானவர் ஹாலியை அணுகிச் சொன்னார்:
"அய்யா, நாங்கள் பிரிட்டிஷாரை வெறுத்ததற்கு காரணம் 'அவர்கள் எங்களை விடப் புத்திசாலிகள்' என்று நம்பியதால்தான். இன்று உங்கள் பேச்சைக் கேட்டதும் அது வீண் பயம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இனி உங்களை நேசிக்க எந்த தடையும் இல்லை...!”
மு. சு. முத்துக்கமலம்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.