மில்க் பேடா
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. மில்க் பவுடர் - 1 கோப்பை
2. சர்க்கரை - 1/4 கோப்பை
3. பால் - 1/4 கோப்பை
4. கோவா - 1/4 கோப்பை
5. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
6. நெய் - 1 மேசைக்கரண்டி
7. பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்துச் சூடானதும் நெய் சேர்த்து அதில் மில்க் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
2. சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கலந்து விடவும்.
3. நன்கு பொடித்த கோவா, பால் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கலந்தால் ஓரம் ஒட்டாமல் பிரிந்து வருபோது இறக்கி, கலந்து ஆறவிடவும்.
4. சூடு ஆறியதும், கொஞ்சம் கெட்டியானதும், கையால் நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டவும்.
5. அதன்பின் உருண்டைகளைக் கையால் அழுத்தி, நடுவில் விரல் வைத்து அழுத்திப் பேடாவை தயார் செய்யவும்.
6. கடைசியாக, ஸ்தா அல்லது பாதாம் பருப்பு வைத்து அழுத்தி அலங்கரிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.