பூசணிக்காய் அல்வா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பூசணிக்காய் விழுது - 1 கோப்பை
2. சர்க்கரை - 3/4 கோப்பை
3. ஏலக்காய் - 10 எண்ணம்
4. நெய் - 1 கோப்பை
5. முந்திரிப் பருப்பு - 100 கிராம்
6. வெள்ளரி விதை - 2 மேசைக் கரண்டி
7. புட் கலர் (ஆரஞ்சு ரெட்) - சிறிது
8. ரோஸ் எசென்ஸ் - 2 துளிகள்
9. லெமன் சாறு - 1 கரண்டி
செய்முறை:
1. பூசணிக்காயைத் தோல் சீவி, துருவி, நன்கு அழுத்தி எடுக்கவும்.
2. பின் அதைக் குக்கரில் போட்டு தண்ணீர் விடாமல் மூடி வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.
3. வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
4. அதன் பின் வெள்ளரி விதை சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
5. பின் மீண்டும் சிறிது நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் வேக வைத்தப் பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.
6. மேலும் சிறிது நெய் விட்டு தண்ணீர் வற்றி வரும் வரை நன்கு வதக்கவும்.
7. பூசணிக்காயை அளந்த அதே கப்பில் சர்க்கரையை அளந்து சேர்த்து நன்கு கிளறவும்.
8. சர்க்கரை இளகி பின் சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்.
9. பின் மீதமுள்ள நெய்யை ஊற்றிச் சூடாக்கி சூடான நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்.
10. ஏலக்காய் உடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
11. பின் அல்வா உடன் சேர்த்து நன்கு கிளறவும்.
12. சர்க்கரை இளகி பின் சேர்ந்து வரும் போது லெமன் சாறு விட்டு நன்கு கிளறவும்.
13. பின் ஆரஞ்சு ரெட் புட் கலர் சேர்த்து நன்கு கிளறவும்.
14. பாத்திரத்தில் ஒட்டாமல் சுழண்டு வரும் போது மீதமுள்ள நெய்யை ஊற்றி, வறுத்த முந்திரி வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
15. அதில் ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு ஒரு முறை கிளறி விட்டுப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.