தேங்காய் பர்பி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்த் துருவல் - 2 கோப்பை
2. பொடித்த நட்ஸ் -1/4 கோப்பை
3. இனிப்பில்லாத கோவா - 1/4 கோப்பை
4. சர்க்கரை - 2_1/2 கோப்பை
5. ரோஸ் புட் கலர் - சிறிது
6. வெனிலா எசென்ஸ் - சில துளிகள்
7. நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
2. ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
3. அதன் பின்பு, மீண்டும் சிறிது நெய் மற்றும் ரோஸ் புட் கலர் சேர்த்துக் கிளறவும்.
4. அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
5. சர்க்கரை இளக ஆரம்பிக்கும் போது கரகரப்பாக உடைத்த நட்ஸ் மற்றும் உதிர்த்த கோவாவைச் சேர்த்து நன்கு கிளறவும்.
6. முதலில் இளகி பின் திக்காக வரும். அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்.
7. அடியில் நுரைத்து வெளுத்துப் பொங்கி வரும் போது, வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
8. நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.
9. அதன் பின்பு. குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஆறவிட்டுத் துண்டுகள் போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.