சிவப்பு அவல் கேசரி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சிவப்பு அவல் - 250 கிராம்
2. சர்க்கரை - 100 கிராம்
3. ஏலக்காய்த் தூள் - 1/4 கரண்டி
4. முந்திரிப் பருப்பு - 12 எண்ணம்
5. உலர் திராட்சை - 12 எண்ணம்
6. நெய் - 3 கரண்டி
7. புட் கலர் - சிறிது
செய்முறை:
1. ஒரு வாணலியில் அவலை போட்டுக் குறைவான நெருப்பில் சிறிது நேரம் வறுத்து, பின் இறக்கி ஆற வைக்கவும்.
2. வாணலியில் சிறிது நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை சேர்த்து வதக்கவும்.
3. அந்த வாணலியில் 2 கோப்பை தண்ணீர் ஊற்றி, புட் கலர் பவுடர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
4. தண்ணீர் கொதித்ததும், அதில் பொடித்த அவல் சேர்த்துக் கிளறவும்.
5. பிறகு அதில் சர்க்கரை, அதில் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
6. கடைசியாக வறுத்து வைத்த முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை மற்றும் நெய் சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.