ரவா கேசரி
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1 கோப்பை
2. சர்க்கரை - 1 1/2 கோப்பை
3. நெய் - 1/2 கோப்பை
4. ஏலத்தூள் - 1 கரண்டி
5. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
6. உலர் திராட்சை - 10 எண்ணம்
7. மஞ்சள் நிற (உணவு) பொடி - சிறிது
செய்முறை:
1. வாணலியில் ரவையை சிறிது நெய் விட்டுச் சூடானதும் வறுத்துக் கொள்ளவும்.
2. அதன் பின்பு, ரவையில் கொதிக்கும் நீர் ஊற்றி நன்கு கிளறவும்.
3. ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
4. அதன் பின்பு மஞ்சள் நிறப் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
5. நெய்யில் முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை போட்டு வதக்கவும்.
6. வறுத்த முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும்.
7. மீதமிருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி இறக்கிப் பின் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.