மஸ்கோத் அல்வா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 1 கோப்பை
2. தேங்காய்ப் பால் - 2 கோப்பை
3. வெல்லம் - 200 கிராம்
4. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
5. உலர் திராட்சை - 10 எண்ணம்
6. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. தேங்காயை அரைத்து, மிக்ஸியில் அரைத்துத் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளவும்.
2. கோதுமை மாவைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு மாவு முழுமையாக மூடும் வரை 2 கோப்பை தண்ணீர் போற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அதை தண்ணீர் கொண்டு மாவைக் கலந்து கட்டியின்றி கோதுமைப் பால் தயாரிக்க வேண்டும்.
4. இரண்டு அல்லது நான்கு மணி நேரம் திக்கான பால் கீழே வரும் வரை வைத்திருக்கவும். சுமார் நான்கு மணி நேரத்தில் தண்ணீர் மேலேயும் கட்டியான பால் கீழும் இருக்கும்.
5. கோதுமைப் பால் ஒரு கோப்பை எடுத்து வைக்கவும்.
6. வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றிப் பாகு காய்ச்ச வேண்டும். பாகை வடிகட்டவும்.
7. ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தேங்காய்ப் பால், கோதுமைப் பால், வெல்லப்பாகு அனைத்தையும் ஒரு கடாயில் ஊற்றி, பால் அனைத்தும் கெட்டியாக வரும் வரை ஒரு மணி நேரம் நன்றாகக் கலந்துவிடவும்.
8. கட்டிகளாகி விடாமல் நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
9. சட்டியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்த பின்பு, அடுப்பிலிருந்து இறக்கி, தட்டு அல்லது கோப்பையில் மாற்றிக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.