கரும்புச்சாறு பயன்கள்
கரும்புச்சாறு குடிப்பது நம் உடல் நலத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது.
* கரும்புச் சாறு அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது.
* உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழி வகுக்கிறது. அதுமட்டுமல்ல, கரும்புச் சாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும்.
* உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் வேதிப்பொருட்கள் நிறைந்த பானங்களைத் தவிர்த்து, கரும்புச் சாற்றைச் சாப்பிட்டால், அது உங்களுக்குப் புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையைப் புதுப்பிக்கும் தன்மை உடையது.
* அதே போன்று விட்டமின் சி அதிகமாகக் கரும்புச் சாறுகளில் இருக்கிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது.
* கரும்புச்சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும் இருக்கிறது.
* தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்புச் சாற்றைத் தொடர்ந்து குடித்து வரும் போது அவை மறைந்துவிடும்.
* சிலருக்குப் பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும். இக்குறைபாடுடையவர்கள் கரும்பு சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை கிடைக்கும்.
* உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்குப் பலம் கிடைக்கிறது. வயிற்றுப் புண்களைச் சரிசெய்யும் மலச்சிக்கலைப் போக்குகிறது.
* பொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். இதற்குக் கரும்பு சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க முடியும். மேலும், இது உடல் சூட்டைக் குறைக்கும் குணமுடையது.
* உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வகிக்கிறது. அந்த வகையில், கரும்புச் சாறு அருந்துவதால், அது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
* கரும்புச் சாற்றில் உள்ள பொட்டாசியம், வயிற்றின் அளவுகளைச் சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமானத் தேவைகளைச் சுரக்கவும் உதவுகிறது.
* பொதுவாக பெரும்பான்மையான செரிமான சிறப்புகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும், செரிமானத் தேவைகள் வளமடையவும் கரும்புச்சாறு பெரும் துணை புரிகிறது.
* உடலில் அதிகரித்துள்ள பித்தத்தைக் கரும்பு சமநிலைப்படுத்தும்.
* சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்குக் கரும்புச்சாறு நல்ல தீர்வாக இருக்கும்.
* கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்தத்தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மையும் கரும்புச் சாற்றில் இருக்கிறது.
* முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை அளவாக அருந்தி நல்ல பலனைப் பெறலாம்.
தொகுப்பு: உ. தாமரைச்செல்வி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.