பகவான் கண்ணன் உடல் நலம் குன்றியவர்களுக்குத் தரிசனம் அளிக்கும் பொருட்டு வீதி உலா வருகிறார்.
அவருக்கு எல்லோரும் பழம், பூ அளித்து கர்ப்பூர ஆரத்தி காட்டுகிறார்கள்.
ஆனால், ஒருவர் மட்டும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை.
அவரை ஸ்ரீகிருஷ்ணன் அழைத்து, "நீ ஏன் எனக்கு ஒன்றும் படைக்கவில்லை?” என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெரியவர், "எல்லாமே நீ கொடுத்தவைதானே? உன்னிடம் இல்லாததைத்தானே நான் படைக்க வேண்டும்’’ என்கிறார்.
அதற்கு பகவான், "என்னிடம் இல்லாதது எது?” என்று வினவுகிறார்.
"பகவானே, பிருந்தாவனத்தில் கோபிகைகளுடன் நீ சஞ்சாரம் செய்து கொண்டிருந்தபோது, உன் மனதை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆதலால் உன் மனம் உன்னிடத்தில் இல்லை. அதற்குப் பதில் நான் என் மனதை உனக்குக் கொடுக்கிறேன்" என்கிறார் பெரியவர்.
பகவானால் பதிலே சொல்ல முடியவில்லை.